Home /News /tamil-nadu /

கொரோனா அலெர்ட்.. ஒரே நாளில் 1003 பேருக்கு பாசிட்டிவ்.. 50% பேர் சென்னைவாசிகள்..

கொரோனா அலெர்ட்.. ஒரே நாளில் 1003 பேருக்கு பாசிட்டிவ்.. 50% பேர் சென்னைவாசிகள்..

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

ர். தமிழகத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 50%க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர். 1489 பேர் இன்று ஒரே நாளில் சென்னையில் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஒரே நாளில் கூடுதலாக ஆயிரம் பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 50 சதவீதம் சென்னையில் பதிவாகியுள்ளது.

    நேற்று தமிழகத்தில் கொரோனா புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1728 ஆகும். இன்று மேலும் 1003 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2731 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.எனவே தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 364 லிருந்து இன்று 12 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 50%க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர். 1489 பேர் இன்று ஒரே நாளில் சென்னையில் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று 876 பேரருக்கு சென்னையில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

    இன்று புதிதாக கண்டறியப்பட்ட 1003 பேரில் 613 பேர் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இது வரை 121 பேருக்கு
    ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் புதிய
    தொற்றாளர்கள் இன்று அதிகரிக்கவில்லை. நேற்று வரை சிகிச்சை முடிந்து 100 பேர் வீடு திரும்பி இருந்தனர். இன்று மேலும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இதையும் படிங்க: விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது


    எனினும் எஸ் மரபணு மாற்றங்கள் புதிதாக மூன்று பேருக்கு கண்டறியப்பட்டு மொத்தம் 220 பேருக்கு தமிழகத்தில் இது வரை எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Omicron, Tamilnadu

    அடுத்த செய்தி