Home /News /tamil-nadu /

ஆறுதல் செய்தி! நான்காவது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

ஆறுதல் செய்தி! நான்காவது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா

கொரோனா

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கொரோனா தினசரி பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,50,931 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 32,24,236  ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 2,13,692 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 27,507 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 5,973 பேருக்கும், செங்கல்பட்டில் 1,883 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,740 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 90 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Omicron, Tamilnadu

    அடுத்த செய்தி