ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி மாநில தலைவர் பதவியை பறிக்க செல்வபெருந்தகை முயற்சி: ரஞ்சன் குமார் பரப்பரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி மாநில தலைவர் பதவியை பறிக்க செல்வபெருந்தகை முயற்சி: ரஞ்சன் குமார் பரப்பரப்பு குற்றச்சாட்டு

செல்வபெருந்தகை மற்றும் ரஞ்சன் குமார்

செல்வபெருந்தகை மற்றும் ரஞ்சன் குமார்

சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்திற்கு செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தான் காரணம் என ரஞ்சன் குமார் குற்றச்சாட்டு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்திமாநில தலைவர் பதவியை பறிக்க செல்வபெருந்தகை எம்.எல்.ஏ முயற்சி செய்கிறார் என்று தமிழக எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் பரப்பரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

  திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இடையே கோஷ்டிப் பூசல் இருந்து வருகிறது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் புதிதாக நியமித்த நிர்வாகிகளுக்கு ரூபி மனோகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நடைபெறவுள்ள 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

  முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகளை நீக்க வலியுறுத்தி, ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மூத்த தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வருவதை தடுத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, கே.எஸ்.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரான எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கினார்கள். அங்கு ஏற்பட்ட அடிதடியில் 3-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  இதையும் படிங்க: ஆபாச ஆடியோ விவகாரம் : பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சஸ்பெண்ட் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

  இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சத்தியமூர்த்தி பவனில், நவ.24ம் தேதி நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

  இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், சத்தியமூர்த்தி பவனில் நவ.15ம் தேதி  நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தேன்.  சம்பவத்தன்று நான் அங்கு இருந்ததால் என்னிடம் விளக்கம் கேட்டறிந்தனர்.என் மீது நேரடியாக யாரும் புகார் அளிக்கவில்லை. சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்திற்கு செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன்‌‌.  செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்து  செயல்படுகிறார். என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published: