ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘குற்றவாளிகள் கொலைகாரர்கள்... நிரபராதிகள் அல்ல...’ -பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

‘குற்றவாளிகள் கொலைகாரர்கள்... நிரபராதிகள் அல்ல...’ -பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

Perarivalan : பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு என் தாயின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் நெகிழ்ச்சி உடன் தெரவித்தார் . ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது.

அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிக்கை தமிழக காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Congress, K.S.Alagiri, Perarivalan, Rajiv gandhi, Supreme court, Tamil News