ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''கூட்டணி வேறு கொள்கை வேறு.. ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவித்தது தவறு''.. திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி

''கூட்டணி வேறு கொள்கை வேறு.. ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவித்தது தவறு''.. திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? - கே.எஸ்.அழகிரி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை விடுதலை செய்தது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

  முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்தார்.

  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய நாள் இன்று. நேரு இல்லை என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போல தற்போது இந்தியாவும் இருந்திருக்கும்.

  தேசிய நெடுஞ்சாலை இந்தியர்களுக்கு பெருமை தரக்கூடியது அதனை ஜவகர்லால் நேரு உருவாக்கினார். விவசாயத்திற்காக ஏராளமான அணைகள் கட்டி விவசாயத்தை மேம்படுத்தினார். கல்வியை கொண்டு வந்தார் மக்களே மக்களை ஆண்டு கொள்வதற்காக அனைத்து வசதிகளும் அவர் செய்து வைத்தார்.

  BSNL இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டது, அதனை ஜவகர்லால் நேரு உருவாக்கினார் தற்போது அது அழிக்கப்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

  முதலமைச்சரை சந்திக்க தயக்கமாக இருக்கிறது- ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான நளினி (news18.com)

  மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ் அழகிரி, “கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா ?

  ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது நாட்டிற்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு. காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: KS Alagiri, Rajiv convicts, Rajiv Gandhi Murder case