ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புது கொரோனா.. பயப்படாதீங்க..! மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

புது கொரோனா.. பயப்படாதீங்க..! மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரொனா பரவல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதேபோல் மாநில அரசும் வெளிநாட்டு பயணிகளை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் சர்வதேச விமானநிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

மேலும்  இந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும்  மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, CoronaVirus