பொதுமக்களை இன்று நேரில் சந்தித்து மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

 • Share this:
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் இன்று நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

  தேர்தலில் திமுக வெற்றிப்பெற்றதையடுத்து பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Also Read: MeKedatu | மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் விவகாரம்.. இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணைதளம் வாயிலாகவும் மனுக்கள் பெறப்படுகின்றன.

  Also Read: ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்; எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார்; அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம்

  இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: