Home /News /tamil-nadu /

அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு... மாநில சுயாட்சி நிச்சயம் வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு... மாநில சுயாட்சி நிச்சயம் வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அண்ணாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதி 5 முழக்கங்களை வைத்தார். அந்த 5 முழக்கங்களில் ஒன்று மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். - மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    மாநில அரசிடம் இருந்து  எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசு பறித்துக்கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தகவல் தெரிவித்துள்ளார்.

    கேள்வி: தேர்தல் கூட்டணியில் பாஜகவுடன் எந்த சமரசமும் இல்லை, தேர்தல் கூட்டணி இல்லை. இந்த கூட்டணியுடன் எதிர்த்துதான் நிற்கப்போகிறீர்களா?

    பதில் : அதில் உங்களுக்கு என்ன சந்தேகம். நீங்கள் எந்த சந்தேகமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    கேள்வி: மாநில சுயாட்சி அகில இந்திய அளவில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது ?

    பதில்: ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நிச்சயமாக மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அறிஞர் அண்ணாவின் உயிலில் மாநில சுயாட்சி பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் கலைஞர், அண்ணாவுக்குபின் ஆட்சிக்கு வந்த பிறகு 5 முழக்கங்களை வைத்தார். அந்த 5 முழக்கங்களில் ஒன்று மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். அதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். இன்று மத்திய அரசு எல்லா அதிகாரத்தை பறித்துக்கொண்டிருக்கிறது.

    நிதி அதிகாரம், ஜிஎஸ்டி, புதிய கல்விக்கொள்கை என பல பிரச்னைகளை கொண்டு வந்து மாநில அரசுகளை முடக்குவதற்கு பழி வாங்குவதற்குமான முறைகளை கையாண்டு கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக மாநில சுயாட்சி பெற்றாக வேண்டும். அதற்கு இன்று பல மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களும் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்காங்கே குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி என நான் நினைக்கிறேன். அது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CM MK Stalin, DMK, Exclusive, MK Stalin

    அடுத்த செய்தி