ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோயிலுக்கு செல்வதுதான் அதிகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோயிலுக்கு செல்வதுதான் அதிகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -சேகர் பாபு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -சேகர் பாபு

ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும் , உயர்வு தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான் திமுக - மு.க.ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என வெட்டி, ஒட்டி திரித்து பரப்புவார்கள். மத்தை வைத்து பிழைக்கும் சிலர் இருக்கின்றனர்.

  அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு செல்லவது தான் அதிகம்.ஒருநாளைக்கு 3 ஊர்களில் இருக்கும் வெவ்வேறு கோவில்களுக்கு சென்று பணியை செய்பவர் சேகர்பாபு. ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக, ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும் , உயர்வு தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான் திமுக.

  Also Read:  திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவியது , இறைவன் ஒருவனே இறைவன் ஜோதி மயமானவன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண்.

  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை அண்ணா முன்வைத்தார். அறப்பணிகளை கண்காணிப்பதற்காகவே , கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளர் சேகர்பாபு.” என்றார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Minister Sekar Babu, MK Stalin, Tamil News