Home /News /tamil-nadu /

சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு - கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு - கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை தான் தென்னிந்தியாவில்  உள்ள முக்கிய தொழில் நகரம் எனவும் தமிழ்நாட்டிற்கே ஏற்றுமதி இறக்குமதி குறியீடுகளை கொடுக்கும் மாவட்டம் எனவும் புகழாரம் சூடினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கோட்டூர் பகுதில் இலங்கை தமிழர்களுக்கு 429 வீடுகள் உட்பட ரூ.662.50 கோடி மதிப்பில் 748 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ரூ. 588.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 1,07,062 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 5வது முறையாக கோவை வந்திருப்பதாகவும், இது கோவை மாவட்டத்தின் மீதும் மக்கள் மீதும் தான் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் எனவும் கூறினார். இந்த கூட்டத்தில், திமுக ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தெரிகிறது எனவும் எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்கள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி, மகிழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோவை தான் தென்னிந்தியாவில்  உள்ள முக்கிய தொழில் நகரம் எனவும் தமிழ்நாட்டிற்கே ஏற்றுமதி இறக்குமதி குறியீடுகளை கொடுக்கும் மாவட்டம் எனவும் புகழாரம் சூட்டினார்.   மேலும் மொத்தம் இதுவரை ரூ. 1,234 கோடி மதிப்பில் 1,38,185 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சமதர்ம சமுதாயம் அமைப்பதே இந்த அரசின் இலக்கு என கூறினார்.

     
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Coimbatore, Tamilnadu

    அடுத்த செய்தி