வடகிழக்கு பருவ
மழை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதேபோல் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனை..
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வடகிழக்கு பருவமழை அதீதிவிர மழையாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, துரித நடவடிக்கை மேற்கொள்வது, முகாம்கள் தயார் நிலையில் வைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளத்.
இதை தொடர்ந்து, மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார், அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.