ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையின் சகோதரி மறைவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையின் சகோதரி மறைவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஸ்டாலின் - செல்வப்பெருந்தகை

ஸ்டாலின் - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகையின் சகோதரி கு.மனோகரி இன்று மதியம் 3 மணியளவில் உயிரிழந்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sriperumbudur, India

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர்

செல்வப்பெருந்தகையின் சகோதரி மனோகரி மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கு.செல்வப்பெருந்தகையின் சகோதரி கு.மனோகரி இன்று மதியம் 3 மணியளவில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவருமான

செல்வப்பெருந்தகையின் அக்காள் மனோகரி இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்தினேன்.

உடன் பிறந்த உயிருக்குயிரான அக்காவை இழந்து தவிக்கும் செல்வப்பெருந்தகைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin