முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி..

முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி..

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா

CM Stalin at Cauvery Hospital : கொரோனா பாதிப்புக் காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில்,  “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை

top videos

    கொரோனா பாதிப்புக் காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை குறித்து கண்காணித்து, பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Corona, Covid-19, MK Stalin