தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் முதல் மின்சார பேருந்தை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும் காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும் மின்சார பேருந்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும் லண்டன் மாநகரத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் c-40 முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா முழுவதுமான 64 நாகங்களுக்கு 5595 பேருந்துகளை இயக்க மத்திய அரசின் FAME INDIA திட்டத்தின் கீழ் பேருந்துகளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை ஈரோடு திருப்பூர் சேலம் வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு 525 மின்சார பேருந்துகளை வாங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இந்த மின்சார பேருந்து பரிசோதனை அடிப்படையில் நாள்தோறும் சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர் அடையாறு வழியாக திருவான்மியூர் வரை காலை இரண்டு முறையும் மாலை இரண்டு முறையும் இயக்கப்படும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வரை இப்பேருந்து இயங்கும். குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பேருந்தில் தானியங்கி கதவுகள் வழித்தடங்களில் அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
32 இருக்கை வசதிகள் கொண்ட பேருந்தில் மின்கலன் இருப்புநிலை மற்றும் வெப்பநிலை, ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து தானாகவே திறக்க வைக்கும் ரிமோட்டில் இயங்கக்கூடிய தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.