’என் வீட்டு கோழிகள் குஞ்சு பொறித்துள்ளன’... சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு!

’என் வீட்டு கோழிகள் குஞ்சு பொறித்துள்ளன’... சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
சென்னையில் உள்ள தனது வீட்டில் தான் வளர்க்கும் கோழி 28  குஞ்சுகள் பொறித்து உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கால்நடை துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், இலவச கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 காேழிகள்  வழங்கப்படுவதாகவும், அதில் 15 காேழி பெட்டை காேழிகள் இதில் 10 சேவல்களும் வழங்கப்படுவதாகவும், தனது வீட்டில் வளர்க்கப்படும் 2 கோழிகள் தலா 14 முட்டையிட்டு 28 குஞ்சுகள் பொறித்துள்ளதாகவும் கூறினார்.


கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கோழிகள் நல்ல காேழிகள் தான் என்றும் அதிகமான பயனாளிகள் பயன் அடையவேண்டும் என்பதற்காகத்தான்  கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading