• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Cyclone Gaja | கஜா புயல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக வேட்டி, சேலையும், 4 லிட்டர் மண்ணெண்ணெயையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாயும் வீட்டுப் பொருட்கள் வாங்க 3,800 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 46 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30,000 மற்றும், 20 காளை மாடுகளுக்கு தலா 25,000 மற்றும் 1,181 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா 10,000 பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும் வழங்கப்படும் எனக்கூறியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்ட தகுதியான நபர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 175 தென்னை மரங்கள் நடப்பட்ட ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 92,000 மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,000 வழங்கப்படு உள்ளது.

நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் ஹெக்டேருக்கு 13,500 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42 ஆயிரமும், பகுதி சேதடைந்த கட்டுமரங்களுக்கு 20,000 வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடைகள் மூலம் பொதுமக்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: