• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர்!

இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  • Share this:
    CAA, NRC போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

    சென்னையில் CAA மற்றும் NRC போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று சட்டப்பேரவையை முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், நீதிமன்றம் இதற்கு தடை  விதித்திருந்தது.

    இந்த நிலையில், நீதிமன்ற தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வாலாஜா சாலையில் ஆயிக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24, இனி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

    மேலும், சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

    சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.









    சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்:



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: