எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபை
  • News18
  • Last Updated: July 20, 2019, 1:12 PM IST
  • Share this:
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2.50 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 10 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடிக்கப்பட உள்ளது.

இன்றைய கூட்டத்தில், கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


”ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஏற்கனவே, நவம்பர் முதல் தேதியை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

Loading...

இதனை அடுத்து, சட்ட மன்ற உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொகுதி மேம்பாட்டு நிதியை 50 லட்சம் ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது ஒரு எம்.எல்.ஏவுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.2.50 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இது தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது.

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...