Home /News /tamil-nadu /

குழந்தைகளுக்கான காய்ச்சலில் தனிகவனம்.. மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு - மா.சுப்பிரமணியன் தகவல்

குழந்தைகளுக்கான காய்ச்சலில் தனிகவனம்.. மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு - மா.சுப்பிரமணியன் தகவல்

ராமாசாமி படையாச்சியார் சிலைக்கு அமைச்சர் மரியாதை

ராமாசாமி படையாச்சியார் சிலைக்கு அமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
குழந்தைகளுக்கான காய்ச்சல் குறித்து கவனம் செலுத்தி அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ராமசாமி படையாட்சியரின் ஆவண படத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

Also Read: கடந்த 6 ஆண்டுகளில் 11 தற்கொலைகள்..! சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது..?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட ராமசாமி படையாட்சியரின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினோம்.குழந்தைகளுக்கான காய்ச்சல் குறித்து கவனம் செலுத்தி அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரும் இது குறித்து தீவிர கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
Published by:Arunkumar A
First published:

அடுத்த செய்தி