Home /News /tamil-nadu /

தமிழக மக்களுக்காக அவமானங்களையும், வலியையும் தாங்கிக் கொள்ள தயார்.. பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..

தமிழக மக்களுக்காக அவமானங்களையும், வலியையும் தாங்கிக் கொள்ள தயார்.. பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

CM Stalin in TN Assembly | நீட் விலக்கு சட்ட மசோதா விவகாரத்தில் தேவை பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி அடுத்த கட்டம் நடவடிக்கை எடுக்க படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் புகழ்ச்சிகளையும், பாராட்டுபவர்களையும் புறம் தள்ளி விட்டு அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ள தயார்  என  பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார். 

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தை தொடர்ந்து 110-விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் பேரவை-யில் பேசினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 210 நாட்களாக நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் ஒரு மனதாக கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் தேனீர் விருந்தில் கலந்து கொள்வது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருக்கும், சட்டமன்ற மான்பினை சிதைப்பதாக இருக்கும் . அதனால் பங்கேற்கவில்லை என்று கடிதம் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் ஆளுநருக்கும் தனிபட்ட முறையில் சுமுகமாக உறவு உள்ளது. நேரில் பார்த்து பேசும் போதெல்லாம் ஆட்சியை பாராட்டி உள்ளார். பொது மேடையில் நம் ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார். ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். தனிப்பட்ட முறையில் மரியாதை தருகிறார், நாங்களும் தருகிறோம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு, இதை எப்போதும் காப்போம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டுகளை விட தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலன் முக்கியமானது. இந்த சட்டமன்ற மான்பை, தனிழ்நாட்டு மக்கள் உணர்வை மதித்து நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக் கூடிய செயல்.

கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்வில் எத்தனையோ வலி, அவமானம் சந்தித்துள்ளேன். அது எல்லாம் பொருட்டு அல்ல. வலி, அவமானம், புகழ்ச்சி, பாராட்டுகளை புறம் தள்ளி விட்டு என் பணி செய்து கிடப்பதே ஆகும். அப்படி தான் செயல்படுகிறேன்.பொது வாழ்கையில் மக்கள் பலன் சார்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் அண்ணா, கலைஞர் கற்று கொடுத்த பாடம். அந்த வழியில் செல்கிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய வலி, அவமானத்தை பொருத்து கொண்டு அதனால் தமிழ்நாடு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் புகழ்ச்சிகளையும், பாராட்டுபவர்களையும் புறம் தள்ளி விட்டு அவமானம், வலி தாங்கி கொள்ள தயார் என குறிப்பிட்டார்.

மேலும் நீட் விலக்கு மசோதா பேரவை-யில் நிறைவேற்றி இன்றுடன் 70 நாள் ஆகிறது. அதை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதை பார்த்து
தேவைபட்டால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி அடுத்த கட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Governor, MK Stalin, RN Ravi, Tamilnadu, TN Assembly

அடுத்த செய்தி