Home /News /tamil-nadu /

கல்வி திட்டங்கள் இலவசங்கள் கிடையாது - மு.க.ஸ்டாலின் விளக்கம்

கல்வி திட்டங்கள் இலவசங்கள் கிடையாது - மு.க.ஸ்டாலின் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin : இலவசங்கள் வழங்க கூடாது என சிலர் கருதுகின்றனர் அதைப்பற்றி கவலையில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கல்வி மற்றும் மருத்துவத்துக்கான ஒதுக்கீடுகளை இலவசத் திட்டங்கள் என்று கருதக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ மேல்நிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 1,546 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதனையடுத்து கபாலீஸ்வரர் கலை கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசியவர், மருத்துவம் மற்றும் கல்விக்கான நலத்திட்டங்கள், இலவச திட்டம் அல்ல சமூக நலத்திட்டங்கள் என கூறினார். இலவசங்கள் வழங்க கூடாது என சிலர் கருத்து கூறுவதாகவும், அதை பற்றி கவலையில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

    Also Read: இலவசங்கள் அறிவிப்பு.. நீளும் வார்த்தை போர்.. மல்லுக்கட்டும் பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள்

    இதைத்தொடர்ந்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. கோயில், பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Minister Anbil Mahesh, MK Stalin, Tamilnadu

    அடுத்த செய்தி