சென்னை திருவான்மியூரில் நடந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேத்தி தீப்தி - விஷ்வக்சேனா திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன். ராமச்சந்திரன் .மெய்யநாதன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் “கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டுத் திருமணம். அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.