தமிழ்நாடும் இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு்ள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது., வியர்வையும், இரத்ததையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் நாம் அனைவரும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.

  Also Read: தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை டிவியில் பார்த்தோம்.. இப்போது நேரில் செல்கிறோம் - நீரஜ் சோப்ரா

  சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது. ஆயுதமின்றி அறவழி ஒன்றையே தங்களின் தொய்வில்லா போராட்டமாக நடத்திக்காட்டி இந்தியாவிற்கு ஜனநாயக்காற்றை சுவாசிக்க கிடைத்த இந்தச் சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அண்ணல் காந்தியடிகள் தமிழர்களின் பண்பாடுகளை நேசித்தவர். இந்தத் தமிழ் மண்ணை மதித்தவர். அத்தகைய தமிழ்நாடு பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் போராட்டத்திற்கான வியூகங்களை வகுப்பதில் ஒரு முக்கியமான களமாக விளங்கியிருப்பதை சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு முத்தாய்ப்பாக பதிவு செய்திருக்கிறது.

  தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் -அயராது உழைத்திடுவோம் என்று 75வது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: