Home /News /tamil-nadu /

ஆளுநருக்கும் எனக்கும் சுமூகமான உறவு உள்ளது.. அவருக்கு மரியாதை கொடுப்போம்... முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆளுநருக்கும் எனக்கும் சுமூகமான உறவு உள்ளது.. அவருக்கு மரியாதை கொடுப்போம்... முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ரவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ரவி

MK Stalin on Governor Ravi | ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் ஆளுநருக்கும் தனிபட்ட முறையில் சுமுகமாக உறவு உள்ளது. - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தை தொடர்ந்து 110-விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் பேரவை-யில் பேசுகையில், “ கடந்த 210 நாட்களாக நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகை-யில் முடங்கி கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டபேரவை வளாகத்தில் ஒரு மனதாக கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

    அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் தேனீர் விருந்தில் கலந்து கொள்வது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாக இருக்கும், சட்டமன்ற மான்பினை சித்தைப்பதாக இருக்கும் . அதனால் பங்கேற்கவில்லை என்று கடிதம் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    Also Read: ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் மாற்றம்: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு?

    ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் ஆளுநருக்கும் தனிபட்ட முறையில் சுமுகமாக உறவு உள்ளது. நேரில் பார்த்து பேசும் போதெல்லாம் ஆட்சியை பாராட்டி உள்ளார். பொது மேடையில் நம் ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார். ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். தனிப்பட்ட முறையில் மரியாதை தருகிறார், நாங்களும் தருகிறோம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு, இதை எப்போதும் காப்போம் என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, MK Stalin, Tamil Nadu Governor, Tamil News, TN Assembly

    அடுத்த செய்தி