• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி - முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி - முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  • Share this:
    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் மரியாதை செய்யவுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: