தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கினார். மேலும், இதற்கான ஆணையை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Kumari anandhan, MK Stalin, Tamilisai Soundararajan