முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளான இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் , கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவரது உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதியின் உருவச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கடந்த 28 ஆம் தேதி திறந்து வைத்தார்.
நடப்பாண்டு முதல் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் , கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரை முருகன், எ வ, வேலு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் இருந்தனர்.
Also Read: கை ரிக்சா ஒழிப்பு முதல் சமத்துவபுரம் வரை.. நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி
இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று காலை 10 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.பின்னர் கலைஞர் எழுதுகோல் விருதையும், 5 லட்சம் ரூபாய் பாராட்டுத் தொகையையும் மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாசுக்கு கலைத்துறை வித்தகர் விருதையும் 10 லட்சம் ரூபாய் பாராட்டுத் தொகையையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, DMK Karunanidhi, Karunanidhi's memorial, MK Stalin, Tamil News, Tamilnadu