• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு!

முதல்வர் கான்வாய்

முதல்வர் கான்வாய்

சிவாஜி கணேஷனின் பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்துக்கு தமிழக முதலமைச்சர் சென்றபோது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில், தனது வாகனமும் நிறுத்தப்பட்டது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தாமல் முதலமைச்சர் வாகனங்கள் கூடவே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

    குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்டோரின் பயணத்தின்போது பாதுகாப்பிற்காக அவர்களின் வாகனத்தோடு கான்வாய் வாகனங்களும் பயணிக்கும்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தின்போது அவரது பாதுகாப்பிற்கும் அவசர தேவைகளுக்காகவும் 12 கான்வாய் வாகனங்கள் அவருடன் பயணிக்கும் .

    இந்நிலையில், இந்த எண்ணிக்கையை பாதியாக தமிழக அரசு குறைத்துள்ளது. இனி 12 வாகனங்களுக்கு பதிலாக 6 கான்வாய் வாகனங்கள் மட்டுமே முதல்வரின் வாகனத்துடன் பயணிக்கும்.  இதேபோல், முதலமைச்சரின் பயணத்தின்போது பொதுமக்கள் வாகனத்தை தடுக்காமல், முதலமைச்சரின் வாகனத்தோடு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு தினங்களுக்கு முன் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    காரணம் என்ன ?

    அண்மையில், சிவாஜி கணேஷனின் 96வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் பயணம் காரணமாக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷின் மிஷின், செல்போன்.. அதிரடி பரிசுகளை அறிவித்த மதுரை மாநகராட்சி!


    இது குறித்து உள்துறை செயலாளர் ஆஜாரகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடடேஷ் உத்தரவிட்டார்.காணொலி காட்சி மூலம் ஆஜாரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம், எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் வழங்கிய அறிவுரையின் பேரில் அவரது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் படிக்க: ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: