மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை: முதல்வர் அறிவுறுத்தல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க முதல் அமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  மக்களுக்கும் பொருளாதாரத்திற்கு பயன் தரும் வகையில் இவ்வாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ‘நான் இல்லையென்றால் வன்னிய சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்’: ராமதாஸ்!

  மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்டக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!  Published by:Murugesh M
  First published: