ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

டிசம்பர் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரவித்துள்ளது. டிசம்பர் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் பரவலாக நள்ளிரவில் தொடங்கிய மழை தற்போது பெய்துவருகிறது. இதனிடையே, அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை  வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 20 நிமிடங்கள் மாணவன் மீது தாக்குதல்; மனிதத்தன்மையற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

First published:

Tags: Rain Update, Tamilnadu