Home /News /tamil-nadu /

16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

மழை

Weather Update : நாளை கோயம்புத்தூர், சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூன் 14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    நாளை (ஜூன் 15 ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    16ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    18ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    விருதுநகர் (விருதுநகர்) 6, கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), உதகை (நீலகிரி) தலா 5, காரியாபட்டி (விருதுநகர்), உதகமண்டலம் PTO (நீலகிரி) தலா 3, வெம்பக்கோட்டை (விருதுநகர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ராஜபாளையம் (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்) தலா 2,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருச்செங்கோடு (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்), சிவகாசி (விருதுநகர்), அழக்கரை எஸ்டேட் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), கெட்டி (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 1.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    இன்று (14.06.2022) தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    Must Read :  மதுபோதையில் தகராறு... பாலியல் தொல்லை - கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி

    நாளை (15ஆம் தேதி) கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16, 17 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Heavy rain, Meteorological Center, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி