ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு

Pongal Gift with Cash for Ration Card Holders | கூட்டுறவுத்துறை பதிவாளர் எழுதியுள்ள கடிதத்தில், துணைப்பதிவாளர்  நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்து  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது

மேலும் படிக்கவும் ...
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதனுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் (Pongal) பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும்  22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழு கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 3ம் தேதி முதல் இந்த பொங்கள் பரிசு தொகுப்பு அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது, முன்னேற்பாடுகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: Gold Loan Waiver: நகைக் கடன் தள்ளுபடி.. பொங்கலுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்..

அதில், பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் 2,15,48,060 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1088,17,70,300 (1088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300)  செலவில் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  கட்டுப்பாட்டு அறை அமைத்தல் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள குறிப்பில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை அமைத்து அதற்கென பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு துணைப்பதிவாளர்  நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்து  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க: அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியாது - உயர் நீதிமன்றம்

இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத்தொகையும் வழங்கப்படுவது உறுதி ஆகியுள்ளது. எவ்வளவு ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், 1000 அல்லது 2000 வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published: