தமிழகத்தில் ₹ 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 6 நிறுவனங்கள் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தமிழகத்தில் ஐந்தாயிரம் கோடி முதலீடு செய்யும் ஆறு நிறுவனங்களுக்கு, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
- News18
- Last Updated: July 14, 2020, 9:05 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் அரசு பள்ளியில் பயிலும் போது அவர்களுக்கும் மருத்துவ சேர்க்கைக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
படிக்க: தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு
படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
இதேபோல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஆறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான விலக்கு, பொது போக்குவரத்திற்கான அனுமதி, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.