தீவிரமடையும் கொரோனா... கட்டுப்படுத்துவது எப்படி? நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை..

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தீவிரமடையும் கொரோனா... கட்டுப்படுத்துவது எப்படி? நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை..
தமிழக அரசு தலைமை செயலகம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை 42 687 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 397 நபர் உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 35 ஆயிரத்து 618 நபர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தீவிரம் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.சென்னையில் பரவலை கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாலை, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தும் பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 5 ஆம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 அன்று முடிவடைய உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூன் 17 மாலை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


தமிழகத்தில் நோய் பரவலின் நிலை, அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.அதன்பின்னர் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், மாவட்ட வாரியான தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.மேலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள் பகிர்வு - சில முக்கிய குறிப்புகள்
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading