ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

41,695 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக முதல்வர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

41,695 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக முதல்வர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜவுளி,  தகவல் தொழில்நுட்ப சேவைகள், தோல் பொருட்கள் மற்றும் காலணி, ரசாயனங்கள்,எக்கு பொருட்கள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டின்  ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் வகையில், ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு, மாநாடு இன்று நடைபெற்றது. இதில், 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

  நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இம்மாதத்தின் 20ம் தேதி முதல் 26ம் தேதிவரை  வர்த்தகம் மற்றும் வணிகம்’ வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில்,  தமிழகத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது

  இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  . இதேபோல் ஏற்றுமதி கண்காட்சியும் துவங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை,  குறு,சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேடு ஆகியவை வெளியிடப்பட்டன.

  41,695 பேருக்கு வேலைவாய்ப்பு

  இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக 2120.54 கோடி ரூபாய் முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு  உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.  தொழில்துறை சார்பில் 1880.54 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 39150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில்14 நிறுவனங்களும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் 240 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 245 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 10 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

  என்னென்ன துறைகள்

  இந்த ஒப்பந்தம் ஜவுளி,  தகவல் தொழில்நுட்ப சேவைகள், தோல் பொருட்கள் மற்றும் காலணி, ரசாயனங்கள்,எக்கு பொருட்கள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் கனரக மோட்டார் உதிரி பாகம், உணவு பொருட்கள்,  மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் , மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள், விவசாய உரம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டன.

  எங்கெங்கு அமையவுள்ளன

  சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

  இதையும் படிங்க: காந்தியின் அடையாளத்தை மாற்றிய நாளின் நூற்றாண்டு விழா இன்று!

  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இ-காமர்ஸ் தளங்களில் பயிற்சி அளித்து அந்த நிறுவனங்களை தேசிய சந்தைகளுக்கு மட்டுமின்றி உலகளாவிய சந்தைகளுக்கும் தயார் செய்திடும் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் எம்.டி.ஐ.பி.பி. நிறுவனம் பிலிப்கார்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.

  தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பு அம்சங்கள்

  நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பு அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி,  2030-ம் வருடத்திற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்துதல் என்று இரு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படும்.

  மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகள் உருவாக்கப்படும்.

  ஏற்றுமதி அதிகமாக மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்றுமதி தொடர்பான பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும். இதற்காக மாநிலத்தில் 10 ஏற்றுமதி பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு ஏற்றுமதி மையத்திற்கு தலா 10 கோடி ரூபாய் என்ற அளவில் 25 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Employment, MK Stalin, Tamilnadu