Home /News /tamil-nadu /

கேரளாவில் தொடரும் வன்முறை : தமிழக அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

கேரளாவில் தொடரும் வன்முறை : தமிழக அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

தமிழக பேருந்து மீது தாக்குதல்

தமிழக பேருந்து மீது தாக்குதல்

பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கேரளாவில் தமிழக பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் எல்லையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு தழுவிய சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Also Read : கேரளாவில் கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்..!

    இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில்  பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற பேருந்து ஒன்றை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தமிழக-கேரளா எல்லைகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

     

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Bandh, Kerala

    அடுத்த செய்தி