TN Budget | இன்று பட்ஜெட் தாக்கல்... பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

TN Budget | இன்று பட்ஜெட் தாக்கல்... பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
தமிழக சட்டப்பேரவை
  • News18
  • Last Updated: February 14, 2020, 9:22 AM IST
  • Share this:
15 வது சட்டப்பேரவையின் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இதன் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

2017 ஆம் ஆண்டை தவிர்த்து, 2011 ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 9 வது பட்ஜெட் இது.

அடுத்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதையும் எதிர்கொள்ளும் வகையில் மக்களை கவர ஏதுவான பல்வேறு புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நடப்பு கூட்ட தொடரிலேயே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு சட்ட மசோதா தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரும் படி திமுக கோரிக்கை மனு அளித்துள்ளது.மேலும், டி.என். பி.எஸ்.சி., முறைகேடு விவகாரம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்திற்கு பின்பு நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் துறை ரீதியான மானிய கோரிக்கை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது இறுதி செய்யப்படும்.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்