முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்... இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்..!

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்... இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 20ஆம் தேதி தாக்கலாகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மார்ச் 9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

அப்போது பேசிய அவர், “2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் 2023- 24ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2022-23ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்” என்று கூறினார்.

சட்டமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். மேலும், வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்களும் அலுவல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 எப்போது வழங்கப்படும், துறை வாரியான நிதி ஒதுக்கீடு  உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் எப்போது? 

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, TN Assembly, TN Budget 2023