தமிழக பட்ஜெட்டில் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

TN Budget 2021

திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகள் மீதான அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 10 முக்கியமான அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • Share this:
திமுக அரசு பொறுப்பெற்ற பின்னர் தனது முதல் பட்ஜெட்டை இன்று கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகள் மீதான அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 10 முக்கியமான அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

1. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

Also Read: வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த ஊர்களில் டைடல், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அறிவிப்பு – முழு விவரம்!

3. பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்

4. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் (புறநகர் புதிய பேருந்து நிலைய அமைவிடம்) வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.

5. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடி விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பூர் என 4 இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும். இதே போல தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்.

Also Read:  தமிழகம் மின்மிகை மாநிலம் கிடையாது – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

6. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை

7. அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு

8. வில்லங்க சான்றிதழ்களை இனி 1950 முதல் இணையதளத்திலேயே பார்வையிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

9. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக திறன்கொண்ட இணைய வசதி ஏற்படுத்தப்படும்

10. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்வு
Published by:Arun
First published: