தமிழக பட்ஜெட் கூடத்தொடரை தொடர்ந்து தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை. நிதி நெருக்கடி உள்ள காலகட்டத்தில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை ஆகும்.
மூலதன செலவினத்திக்காக 26% கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சாலை வசதி, மின்சார வசதி, பாசன வசதி உள்ளிட்டவற்றிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டு நிதிகளை கணக்கில் வைத்து கொண்டு செலவுகளை துல்லியமாக கணக்கிட்டு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019-20ம் நிதி ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய வரி வசூல் 7,586 கோடி குறைந்துள்ளது.
அடுத்தாண்டு மாநில வளர்ச்சி விகிதம் மற்றும் மாநில வருவாய் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் நடுநிலையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி வழங்குவது தமிழகம் மட்டும் தான்.
ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருமானம் அதிகரித்து வருகிறது. மாநில வருமானத்தின் 25% அளவில் கடன் இருந்தால் சமளித்துக்கொள்ளலாம், அதில் தமிழகம் 21.83% மட்டுமே கடன் வைத்துள்ளது. குறிப்பிட்ட 25% மேல் கடன் இல்லாததால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.