ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் புதன்கிழமைதோறும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்: சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் புதன்கிழமைதோறும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்: சுகாதாரத்துறை அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் ஆகி தடுப்பூசி செலுத்த தமிழகத்தில் செப்டமர் 4ம் தேதி வரை 4.34 கோடி பேர் தகுதியானவர்கள் உள்ளார்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பூஸ்டர் டோஸ் தமிழ்நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாக செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதிக்குள் 75 நாட்களில்  18 முதல் 59 வயதோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் முடிந்தாலும் கையிருப்பில் உள்ள தடுப்பூசியை செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு? மோடியை சந்திக்கிறாரா ஓ.பி.எஸ்? - வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்!

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் ஆகி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதி வரை 4.34 கோடி பேர் தகுதியானவர்கள் உள்ளார்கள். இவர்களில் 92,42,804 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 21.26% பேர் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தியுள்ளனர். இன்னும் 3.42 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது 9.82 லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளதால், அவை அடுத்த சில வாரங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: Corona Vaccine, Tamilnadu