• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு பணி ராஜினாமா முதல் கவர்னர் வரை... இல.கணேசன் அரசியல் பயணம்

அரசு பணி ராஜினாமா முதல் கவர்னர் வரை... இல.கணேசன் அரசியல் பயணம்

இல.கணேசன்

இல.கணேசன்

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

  • Share this:
    மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை, மணிப்பூர் ஆளுநராக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள இல.கணேசன், பாஜகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன் அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு, இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 1991ம் ஆண்டு மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார், கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டதால், அடுத்தடுத்து பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய துணை தலைவர் பதவிகளையும் பெற்றார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய இல.கணேசன், 2016ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    Also Read : சென்னையில் வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி... முன்பதிவு செய்வது எப்படி?

    மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள இல, கணேசனுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்... 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது முதலே, தமிழகத்தில் காலூன்ற பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தமிழக தலைவர்களுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் பதவியுடன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளத. எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான சண்முகநாதன் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு, மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: