ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'பொங்கல் பரிசு ₹5000 கொடுத்து கரும்பு, வெல்லம் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்' - பாஜக ஆர்ப்பாட்டம்

'பொங்கல் பரிசு ₹5000 கொடுத்து கரும்பு, வெல்லம் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்' - பாஜக ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பாஜக விவசாய அணியினர், கையில் கரும்புகள் மற்றும் தேங்காய்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக விவசாய அணியினர், கையில் கரும்புகள் மற்றும் தேங்காய்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் வெல்லம், கரும்பு ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் செங்கரும்புக்கு அரசு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுழைவாயிலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: BJP, CM MK Stalin, Pongal Gift