தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு - நமிதா, கவுதமிக்கு முக்கிய பதவி

தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு - நமிதா, கவுதமிக்கு முக்கிய பதவி
நடிகைகள் நமிதா மற்றும் கவுதமி
  • Share this:
திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும், நடிகைகள் நமிதா, கவுதமி உள்ளிட்டோருக்கும் தமிழக பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின் பாஜகவின் அனைத்துப் பதவிகளுக்குமான நியமன அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசனுக்கு மாநில துணைத் தலைவர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனும் மாநில துணைத் தலைவர் பதவியில் நீடிக்கிறார்.


மேலும், மாநில துணைத் தலைவர்களாக எம்.சக்ரவர்த்தி, கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், எம்.என்.ராஜா, மஹாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மாநில பொதுச் செயலாளர்களாக ராகவன், ஜி.கே.செல்வகுமார், சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also read... உலகக்கோப்பை போட்டியில் சூதாட்டம்? முன்னாள் கேப்டன் சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை..

மாநிலப் பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், இணைப் பொருளாளராக சிவ சுப்ரமணியமும், அலுவலகச் செயலாளராக எம்.சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் நமிதா, கவுதமி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில இளைஞரணித் தலைவராக வினோஜ் பன்னீர் செல்வமும், மகளிரணித் தலைவராக மீனாட்சியும், வழக்கறிஞர் அணித் தலைவராக புதிதாகக் கட்சியில் இணைந்த பால் கனகராஜும், இலக்கிய அணித் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் என 25 பிரிவுகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 29 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செய்தித் தொடர்பாளர்கள் 8 பேர், மாவட்டப் பார்வையாளர்கள் 60 பேர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் 78 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading