பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு - தமிழக அரசு மீது அடுக்கடுக்கான புகார்

பிரதமர் மோடியுடன் பாஜக எம்.எல்.ஏக்கள்

சட்டமன்றத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுப்பதாக குற்றச்சாட்டை பாஜக முன்வைக்கிறது.

  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு தமிழக அரசு நடவடிக்கை மீது ஏராளமான புகார்கள் தெரிவித்ததாக தகவல்

தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார் , அவருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள்  பிரதமர் நரேந்திர மோடியை  சந்திக்க சென்றனர்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இதை பாஜக தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியாகவே கருதுகிறது.

இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவின் ஆட்சி அமைந்ததால் பாஜக குரல் ஓங்கி ஒலிக்கவில்லை குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது இதனால் சட்டமன்றத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுப்பதாக குற்றச்சாட்டை பாஜக முன்வைக்கிறது. எனவே இன்று பிரதமர் நரேந்திரமோடியுடன் நடைபெற்ற சந்திப்பில்
பாஜக தலைவர் முருகன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் இந்த விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக
1.நீட்டுக்கு எதிராக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து நீட் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
2.அதேபோல நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம்
3.ஷேல் கேஸ் 4.ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு எதிர்ப்பு
5.வேளாண் சட்டங்களுக்கு எதிராக விரைவில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது
6.குடியுரிமை சட்டம் மற்றும்7.புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்த கட்டமாக தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தங்கள் செயல்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: