நடிகர் விவேக் மறைவு நமக்கெல்லாம் மீளா துயரம் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல்

எல்.முருகன்

நடிகர் விவேக் இடத்தை சமூகத்திலும் சரி திரையுலகிலும் சரி ஈடு செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகத்திற்கு வெளியே வந்து மக்களுக்கான மனிதராக விளங்கினார். பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என பல்துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டினார்.

  சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் விவேக் அவர்கள் பல்வேறு விருதுகளை பெற்று மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுகிற வகையில் தடுப்பூசி போட வேண்டுமென்ற பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தார்.

  மாரடைப்பு நோய் அவரை நம்மிடமிருந்து மறைந்து விட்டது. அவருடைய இடத்தை சமூகத்திலும் சரி திரையுலகிலும் சரி ஈடு செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அனைவரையும் சிரித்து சிந்திக்க வைக்க தெரிந்தவர், இன்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டார்.

  Also Read : நடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல்...!

  அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரை உலகிற்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: