தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் தமிழக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, தமிழகம் முழுவதும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்த வேண்டுமென்று முடிவு செய்து இருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மின் இணைப்பு உங்கள் தாத்தா / அப்பா பெயரில் இருந்தால் ஆதாருடன் இணைப்பது எப்படி?
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு அதனை நாடு முழுவதும் பரப்பும் வகையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது, இந்த பயணத்தில் 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''ஆர் எஸ் பாரதி போன்றோர் அறிவாலயத்தின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பதுதான், கோபாலபுரம் குடும்பம் தங்களுக்கு பிச்சை போடுவார்கள் என்று காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக ஆர் எஸ் பாரதி போன்ற 3 பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டு வருகிறோம், சுற்றுப்பயணம் என்று சொல்வதை விட அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க உள்ளேன், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் முடித்தால் கிராமம் கிராமமாக செல்ல வேண்டும் ஒரு வருடம் முழுவதுமாக இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் விரைவில் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, தமிழகம் முழுவதும் அடுத்த முறை தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்த வேண்டுமென்று முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.