முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேலையை பாருங்க.. திரைத்துறை விமர்சனங்கள் வேண்டாம் - அண்ணாமலை அட்வைஸ்

வேலையை பாருங்க.. திரைத்துறை விமர்சனங்கள் வேண்டாம் - அண்ணாமலை அட்வைஸ்

பாஜக தலைவர் அண்னாமலை

பாஜக தலைவர் அண்னாமலை

கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருப்பதால் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Last Updated :

திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை  மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களையும் கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.

Also Read:  சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. கனமழையால் போக்குவரத்து மாற்றம்

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர  சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது.  அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.

Also Read: அரசு வேலைக்கு பணம்: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது...

top videos

    நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Annamalai, BJP, Cinema, Jai Bhim, Tamilnadu