Home /News /tamil-nadu /

ஊழல் பட்டியல்... கோபாலபுரத்தை கைகாட்டும் திமுக அமைச்சர்கள் - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு

ஊழல் பட்டியல்... கோபாலபுரத்தை கைகாட்டும் திமுக அமைச்சர்கள் - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு

அண்ணாமலை

அண்ணாமலை

திமுகவின் அனைத்து பொய்களையுப் மக்கள்மன்றத்தில் தொடர்ந்து பாஜக வைப்பதால்தான் திமுக அரசு திணறி வருகிறது - அண்ணாமலை

    திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப் போகிறோம் என்று தெரிவித்த உடன்  திமுக அமைச்சர்கள் தனக்கு தூது விடுவதாகவும், இதற்குக் காரணம் நாங்கள் அல்ல கோபாலபுரம் தெரிவித்ததால் தான் கையெழுத்து போட்டோம் என்று பேசுவதாகவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்  பழனி அருகே வயலூரில் நடைபெற்றது‌. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அண்ணாமலை முன்னிலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- திமுக கூட்டத்திற்கு பிரியாணி கொடுத்து அழைக்கும் அமைச்சர் சக்கரபாணி,  பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக பிரியாணி பொட்டலம் வழங்கியுள்ளார். இதுவே அரசியல் கலம் மாறியுள்ளதற்கான சாட்சி என்றும்,வெளியே சிரிப்பு உள்ளே சர்வாதிகாரம் என்ற மனப்பான்மையுடன் செயல்படுபவர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி என்றும், தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது என்றும், வாக்குறுதியை எழுதிய டி.ஆர்.பாலுவிடம்தான் கேட்கவேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படி என்றால் டி.ஆர்.பாலுவை முதல்வர் ஆக்குங்கள் அதை பாஜக வரவேற்கும். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் கூறுகிறார்.

    இதுதான் ஸ்டாலின் சாதனை

    தமிழகத்தில் என்ன நடந்தாலும்  அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. திருவாரூர் சென்ற முதல்வர் வயல்காட்டில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வெள்ளை சட்டை,வேஷ்டி கட்டி விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி., ஒரு வருட காலத்தில் அதிக பொய் பேசி சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின். அதுதான் அவரது ஒருவருட சாதனை.

    ஊழல் பட்டியல் தூதுவிட்ட அமைச்சர்கள்

    ஸ்டாலின் முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சர்கள்  வேண்டுமென்றே  பேசிவருகிறார்கள். ஊழல் குறித்து வெளியிடப்போவதாக அறிவித்த உடன் மூன்று, நான்கு தமிழக அமைச்சர்கள் தனக்கு தூது விட்டுள்ளதாகவும், அப்போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை,கோபாலபுரம் தெரிவித்ததால் மட்டுமே கையெழுத்து போட்டதாக தெரிவித்தனர் என்றும் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Also Read: தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதே பாஜக நிலைப்பாடு - நயினார் நாகேந்திரன்

    அமெரிக்க வங்கிகளை திவால் செய்த அமைச்சர்

    மேலும் ‌இந்தியாவில் உள்ள நிதி அமைச்சர்களிலேயே தமிழக நிதிஅமைச்சர்தான் அமெரிக்க வங்கிகளை திவால் செய்துவிட்டு தமிழகம் வந்தவர் என்ற பெருமை அவருக்குதான் உண்டு. அவர் கொடுத்த பொய்யான தரவுகளை பிரதமர் முன்பு பேசி தமிழகத்திற்கு அவமதிப்பை பெற்றுதந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கு வரும் முன்பு மத்திய அரசு என்றவர் ஆட்சி அமைத்தவுடன் ஒன்றிய அரசு எனக்கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்றும் பேசினார்.

    திமுக கோட்டையில் பிரதமருக்கு திரண்ட கூட்டம்

    திமுகவின் கோட்டை என பெருமை பேசும் சென்னையில் 50,000 பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு கொடுத்ததை ஏற்கமுடியாததே முதல்வரின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம்.  மோடி கடந்த 8ஆண்டுகளில் காஷ்மீர் முதல் உலக பிரச்சினை வரை கையாண்டு வருகிறார். மோடி பிரதமரானவுடன் தீவிரவாதம் குறைந்துள்ளது. நக்சலைட் பிரச்சினைகள் உள்ள மாநிலங்களில் அதை முற்றிலும் ஒழித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரவுடிகள் தைரியமாக நடமாடி அச்சமின்றி கொலை செய்வது அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு உதாரணம் ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளியை நீதிமன்றம் கருணை அடிப்படையில் விடுவித்ததை முதல்வர் நேரில் சென்று வரவேற்று உச்சிமுகர்ந்தது முதல்வருக்கு புத்தி உள்ளதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு வருடத்தில் இவ்வளவு ஊழல் செய்வதை ஏற்க முடியவில்லை. தமிழகத்தில் யார் முதல்வர் என தெரியாத அளவிற்கு முதல்வரின் மகன் உதயநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்து தள்ளுவது 23ம் புலிகேசியை பார்ப்பது போல் உள்ளது.

    மகன், மருமகனை தொடர்ந்து மூன்றாவதாக முதல்வரது மனைவி துர்கா ஸ்டாலின் புதிய பவர் சென்டராக உருவாகியுள்ளார். இதன்படி மகன், மருமகன், மனைவி என மூன்று முதல்வர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். உக்ரைனில் இருந்த தமிழக மாணவர்களை மீட்டதற்கு சொட்டர் கம்பெனிக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவுக்கு கொடுத்துள்ளனர்‌. இதன்மூலம் தமிழகத்தை ஆட்சி செய்ய தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Also Read: ஜிஎஸ்டி கணக்கை மாற்றுவாரா தமிழக நிதியமைச்சர்? - அண்ணாமலை கேள்வி

    காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கூட்டுக்களவாணியாக சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததாகவும், பின்னர் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு இருந்த பிரிவு6 என்ற உரிமையை திருட்டுத்தனமாக 1976ல் நீக்கியது காங்கிரஸ் கட்சி என்றும், இவை அனைத்தையும் திட்டமிட்டு மறைத்துவிட்டு இப்போது கச்சைத்தீவை மீட்க வேண்டும் என்று  மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார்.இலங்கை தமிழர்களுக்கு  பாரதபிரதமர் மோடி செய்ததை போல இதுவரை யாரும் செய்ததில்லை. தமிழகத்திற்கு 14ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக பொய் பேசி, அதனை கொடுத்தால் பெட்ரொல் விலையை குறைப்பதாக தெரிவித்தனர்

    . இப்போது தமிழகத்திற்கு தரவேண்டிய 9ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் முழுவதும் மத்திய அரசு கொடுத்துவிட்டது மத்திய அரசு கொடுக்கவேண்டிய அனைத்து பணத்தையும்  கொடுத்துவிட்ட நிலையில் இப்போது மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார். திமுகவின் அனைத்து பொய்களையுப் மக்கள்மன்றத்தில் தொடர்ந்து பாஜக வைப்பதால்தான் திமுக அரசு திணறி வருகிறது என்றும் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், மாநிலத் தலைவர் வினோஜ் பி செல்வம், மாவட்ட தலைவர் கனகராஜ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: அங்கு பாபு நடராஜன் (பழனி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Annamalai, BJP, Corruption, DMK, MK Stalin, Modi, Tamil News, Tamilnadu, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி