Home /News /tamil-nadu /

தமிழக பட்ஜெட்டை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழக பட்ஜெட்டை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

மக்களை திசை திருப்பும், ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து மார்ச் 25ம் தேதி  காலை 10 மணிக்கு  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. தமிழக பட்ஜெட்டை  கண்டித்து மார்ச் 25ம் தேதி சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக பட்ஜெட்  மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக நிறைவேற்றினாலே உன்னதமான  தமிழ்நாடு கண்முன்னே உருவாகும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிகொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    கல்விக் கடன் ரத்து,  நகைக்கடன் ரத்து,  குடும்ப பெண்களுக்கு  ரூ.1000 மாத ஊக்கத்தொகை, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, சமையல், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு என கொடுத்த தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டமில்லாத பட்ஜெட் என்பதால் உன்னதமாக பார்க்கிறாரா?

    இதையும் படிங்க: மேகதாது விவகாரம் : தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் சட்டப்படி செல்லாது - சித்தராமையா


    மக்களை திசை திருப்பும், ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து மார்ச் 25ம் தேதி  காலை 10 மணிக்கு  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  அறிவிப்புகளில்  ஆட்சி நடத்தும்  அறிவாலயம் திமுக ஆட்சியை கண்டித்து, அனைத்து துறைகளிலும்  வீழ்ச்சிப் பாதையில் தமிழகத்தை தவறாக  வழிநடத்தும் திமுக ஆட்சியை  கண்டித்து முழக்கமிட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, TN Budget 2022

    அடுத்த செய்தி